புதினங்களின் சங்கமம்

மட்டக்களப்பு UNLIMIT ஆடையகத்தில் நடக்கும் பாலியல் தொல்லை!!

நேற்றைய தினம் 27/02/2021 மதியம் 12.30 மணியளவில் ஒரு யுவதி #UNLIMIT ஆடையகத்திற்கு சென்றதாகவும் அங்கே ஒரு கண்ணாடி முன் நின்று (ஆடைமாற்றும் அறை அல்ல) ஆனால் தனிமையான இடம் – ஆடையின் அளவுகளை சரிபார்த்ததாகவும் அந்த சமயத்திலேயே சுமார் 20-30 நிமிடங்களாக பல முயற்சிகளின் பின் பாலியல் தொல்லையின் உச்சத்திற்கு சென்றுள்ளார் சம்பந்தப்பட்ட டேவிட் புள்ள. அதன் பின்னர் அந்த யுவதி கோபப்பட்டு ஆடையை தூக்கிவீசிவிட்டு வெளியே வந்துள்ளார். (அந்த நேரம் அங்கு பணிபுரிபவர்களால் சமாளிfication நடந்ததாகவும் தெரிகிறது)

அதன் பின் 3 மணியளவில் சம்பவத்தை அறிந்த சில இளைஞர்கள் அவ்விடம் சென்று சிலரை பதம் பார்த்ததாகவும் , சட்டரீதியான நடவடிக்கைக்கு ஆதாரம் தேவையென்ற காரணத்தினால் CCTV Storage Device ஐ கையகப்படுத்தியுள்ளதாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது. (டேவிட் புள்ள தலைமறைவாகியுள்ளார்)
அதன் பின் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளரை தொடர்பு கொண்டு கேட்டபோது, அப்படியான சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்றும் , பலமுறை ஆடை மாற்றிப்பார்த்ததாகவும் இறுதியில் எதுவும் வேண்டாம் என்றதாகவும், ஏதோ காசுப்பிரச்சினை அதனாலேயே தர்க்கம் ஏற்பட்டு அதனை திரிவுபடுத்தி பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளர் எனவும் கூறியுள்ளார். (உன்னில் பிழை பிரச்சினை இல்லை என்றால் எதற்காக அவசரமாக கடையை அடைத்துவிட்டு ஓடவேண்டும், பொலிஸ் நிலையம் அருகிலேயே உள்ளது சென்று பொய்ப்பழி போடுகிறார்கள் என்று முறைப்பாட்டை பதிவுசெய்திருக்கலாம் – சிலவேளை இளைஞர்கள் புத்திசாலித்தனமாக செயற்படாமல் விட்டிருந்தால் CCTV காணொளி அழிக்கப்பட்டிருக்கலாம் ஆனால் அழித்துவிடக்கூடும் என்ற காரணத்தினாலேயே அந்த ஆதாரம் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளதாக அறிந்தேன்)
அத்துடன் நின்றுவிடாமல் பிரச்சினையை திசைதிருப்ப பலரின் மூலம் சமரசம் பேச முயற்சித்தாகவும், முயற்சித்து வருவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

#குறிப்பு : தெரிந்து ஒன்று தெரியாமல் பல… இதைப்போன்ற தொல்லைகளை அனுபவித்த பலர் சொல்லிக்கொள்ள முடியாமல் கடந்து சென்றுள்ளனர். சென்றுவரும் வாடிக்கையாளர்களுக்கே இப்படி எனின், தொழில் புரியும் வறுமைக்கோட்டின் கீழுள்ள யுவதிகளின் நிலை ? பாவப்பட மட்டுமே நம்மால் முடியும் இதற்கு மாற்றுவழியை ஏற்படுத்த அதிகாரத்தில் உள்ளவர்கள் செல்வந்தர்கள் முதலீட்டார்கள் சேர்ந்து முடிவெடுங்கள்.
அதைத்தாண்டி இதற்கான தீர்வு என்ன என்பதை மக்களே நீங்களே சிந்தித்து முடிவெடுங்கள். இந்த விடயம் ஒவ்வொருவருக்கும் மிகமுக்கிய பாடம்.

நாளை உங்கள் வீட்டிலும் நடக்கலாம்/ உங்களுக்கும் நடக்கலாம்.
சட்டம் தன்கடமையை செய்யும் என்று ஒருபுறம் நம்பினாலும் இனிவரும் காலங்களில் நீங்களே சிந்திக்கவேண்டும்.
இறுதித்தருணமிது சிந்தியுங்கள்.

நன்றி
இது ஒரு பேஸ்புக் பதிவாகும்.