டாக்டராக இருப்பவர்கள் பெரும்பாலும் டாக்டரையே திருமணம் செய்வது ஏன்???

 

இங்கெல்லாம் பொண்ணு கிடைப்பதே பெரும்பாடா இருக்கு. இதில் எல்லாமே நமக்கு பிடித்த மாதிரி இருக்க வேண்டுமென்றால் ரொம்ப கஷ்டம். முன்ன எல்லாம் டாக்டர் பையனுக்கு, டாக்டர் பெண்ணா பார்த்து கட்டி வைப்பாங்க. இப்போ ஐ.டி வேலை செய்பவர்களுக்கும், ஐ.டி துறையில் பணியாற்றும் பெண்ணாக பார்த்து திருமணம் முடித்து வைக்கின்றனர். மனதை வைத்து முடிவு செய்யப்பட்ட திருமணங்கள், இன்னைக்கு அவரவர் செய்யும் வேலையை பொறுத்து முடிவு செய்யப்படுகிறது.

பணியிடத்தில் நிலவும் சூழலே இதற்கு காரணமாக அமைகிறது. எங்க மாமா வகை சொந்தத்தில் ஒரு பெண்ணுக்கு, கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. பொண்ணு ஐ.டி வேலை. பையன் லோக்கலில் சொந்த பிஸினஸ் செய்கிறார். திருமணத்திற்காக ஐ.டி வேலை வேண்டாமென சொல்லி, பெற்றோர்கள் திருமணம் முடித்து வைத்துள்ளனர். ஆறே மாதத்தில் நிலைமை தலைகீழாக மாறியிருக்கிறது. பையன் நம்ம ஊரு பழக்க வழக்கங்களை பார்த்து வளர்ந்தவர். அந்த பெண்ணோ, ஐந்து வருடம் ஐ.டி துறையில் பணியாற்றியவர்.

இருவருக்கும் எல்லா விஷயத்திலும் ஏழாம் பொருத்தமாக இருந்துள்ளது. மார்டன் வாழ்க்கை வாழ அவளுக்கு விருப்பம். குடும்பத்தோடு ஒன்றி வாழ வேண்டும் என்பது மாப்பிள்ளையின் விருப்பம். இரண்டும் ஒத்துப்போகாமல், இப்போ விவாகரத்துக்கு அப்பளை பண்ணி இருக்காங்க. இந்த மாதிரி எல்லாம் நடப்பதால் தான். அந்தந்த வேலைக்கு ஏற்ற வரனாக பார்த்து மனம் முடித்து வைக்கின்றனர். அதில் மருத்துவ துறையில் பணியாற்றுபவர்கள் கரெக்டா இருக்காங்க.

டாக்டர் வேலை பார்ப்பவர்கள், டாக்டரை திருமணம் செய்ய காரணம் இருக்கு. மருத்துவர்களின் தொழில் எல்லைகள் குடும்ப வாழ்க்கையை சோதிக்க வல்லவை. திடீரென நள்ளிரவில் ஒரு நோயாளியை கவனிக்க மனைவியையும் தூக்கத்தையும் துறந்து செல்லும் நிலை வரக்கூடும். அப்போது வாழ்க்கைத்துணை சகித்து கொள்ள வேண்டுமெனில், அதே தொழிலில் இருப்பவர்களால் எளிதில் புரிந்து கொள்ள முடியும். இது தவிர, இயல்பாக தொழில் ரீதியான உறவு வருமானத்துக்கும் உதவும்.

error

Enjoy this blog? Please spread the word :)