புதினங்களின் சங்கமம்

ஏராளமானவர்களைக் கொலை செய்ய சைக்கிள் போல்ஸ் பயன்படுத்திய தற்கொலைதாரிகள்!! (video)

உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலிற்கு அதிகளவான
சைக்கிள் போல்ஸ்களையே பயன்படுத்தப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
அதிகமானவர்களை கொல்ல வேண்டும் என்பதே தாக்குதலாளிகளின் குறியாக
இருந்ததாலேயே சைக்கிள் போல்ஸ் பாவிக்கப்பட்டுள்ளது.

சம்மாந்துறையிலுள்ள வீட்டை கடந்த 26ம் திகதி பாதுகாப்பு தரப்பினர்
சுற்றிவளைத்தபோது, 100,000 சைக்கிள் போல்ஸ் கைப்பற்றப்பட்டது. அந்த
வீட்டிலேயே வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புக்களில் காயமடைந்த பெரும்பாலானவர்களின்
உடலில் சைக்கிள் போல்ஸ் சிதறல்கள் இருந்தமை அவதானிக்கப்பட்டிருந்தது.

அல்கொய்தா மற்றும், ஐ.எஸ்.ஐ.எஸ் ஆகிய தீவிரவாத அமைப்புக்கள்
பயன்படுத்தும் அசிட்டோன் மற்றும் ஹைட்ரஜன் பெராக்சைட் இரசாயன
பதார்த்தங்களின் கலவையில் தயாரிக்கப்படும் ரி.ஏ.ரி.பி வகை வெடிமருந்தையே,
இலங்கை தாக்குதலாளிகள் பாவித்ததாக கூறப்படுகிறது.