ஆசிரியைக்குத் தொற்று; முடங்கியது பூநகரி மத்தியகல்லூரி!
கிளிநொச்சி பூநகரி மத்தியகல்லூரியில் கல்வி கற்பிக்கும் சாவகச்சேரியைச் சேர்ந்த ஆசிரியைக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் கற்பிக்கும் கல்லூரிக்கு ஆசிரியர்களும் மாணவர்களும் சமூகமளிக்கவில்லை என்று தெரியவருகிறது.
இதேவேளை,
குறித்த கல்லூரி தற்காலிகமாக மூடப்படுகிறதா? என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரனைத் தொடர்புகொண்டு கேட்டபோது,
குறித்த ஆசிரியை கற்பிக்கும் வகுப்பு மாணவர்கள் மற்றும் ஆசிரியையுடன் நெருங்கிப் பழகும் ஆசிரியர்களையே தனிமைப்படுத்துவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

