புதினங்களின் சங்கமம்

ஆசிரியைக்கும், காதலனிற்கும் கொரோனா: முன்னணி பாடசாலை நேர்ந்த கதி..!

ஹட்டன் பகுதியிலுள்ள ஹைலெவல் சர்வதேச பாடசாலையில் பணிபுரியும் ஆசிரியை ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் அப்பாடசாலை இன்று செவ்வாய்க்கிழமை முதல் மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

மேலும் பாடசாலை முழுவதும் தொற்றுநீக்கி தெளித்து, தொற்று நீக்கம் செய்யும் நடவடிக்கையை முன்னெடுப்பதற்காகவே பாடசாலை இவ்வாறு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

அத்தோடு குறித்த ஆசிரியைக்கும் அவரின் காதலருக்கும் திடீர் சுகயீனம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இருவரும் சிகிச்சைக்காக டிக்கோயா வைத்தியசாலைக்கு நேற்று திங்கட்கிழமை சென்றுள்ளனர்.

மேலும் இங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இருவரும் கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு ஆசிரியர் அண்மை நாட்கள் வரை பாடசாலைக்கும் சென்றுள்ளார். தரம் 6 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இப்பாடசாலையில் சுமார் ஆயிரம் மாணவர்கள் வரை கல்வி கற்கின்றனர்.
அதிபர் உட்பட 40 ஆசிரியர்களும் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.