புதினங்களின் சங்கமம்

மாணவியுடன் பாலியல் உறவில் ஈடுபட்ட அமெரிக்க பாடசாலை ஆசிரியை கைது!

அமெரிக்காவிலுள்ள பாடசாலையொன்றின் ஆசிரியை ஒருவர், தனது மாணவி ஒருவருடன் 2
வருடங்களாக பாலியல் உறவில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

35 வயதான ஹேலி மோர்கன் ஹால்மார்க் எனும் யுவதியே கைது செய்யப்பட்டவாவார்.

இவர் புளோரிடா மாநிலத்தின் நைஸ்விலே நகரிலுள்ள பாடசாலையொன்றில் ஆசிரியையாக
பணியாற்றியவர். அப்பாடசாலையின் மகளிர் கால்பந்தாட்ட அணிக்கான பயிற்றுனராகவும் அவர்
செயற்பட்டார்.

கடந்த வெள்ளிக்கிழமை (5) ஹேலி மோர்கனை பொலிஸார் கைது செய்தனர்.

தனது மாணவிகளில் ஒருவருடன் ஹேலி மோர்கன் பாலியல் உறவில் ஈடுபட்டார் என பொலிஸார்
குற்றம் சுமத்தியுள்ளனர்.

மேற்படி மாணவி 14 வயது சிறுமியாக இருந்தபோது அம்மாணவியுடன் ஆசிரியை ஹேலி மோர்கன்
பாலியல் உறவில் ஈடுபட ஆரம்பித்ததாகவும் 2 வருடங்கள் இத்தகாத நடத்தையில் அவர் ஈடுபட்டார்
எனவும் பொலிஸ் அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி மாணவிக்கு தற்போது 17 வயதாகுகிறது. அம்மாணவி பொலிஸாரின் விசாரணையின்போது
இது குறித்து கூறுகையில், தான் 8 ஆம் வகுப்பில் இருந்தபோது, ஆசிரியை ஹேலி மோர்கன்
தன்னுடன் நட்பாகியதாகவும், 2017 ஆகஸ்ட்டிலிருந்து அடிக்கடி மெசேஜ்களை அனுப்ப
ஆரம்பித்தார் எனவும் தெரிவி;த்துள்ளார்.

பின்னர் இந்த உறவானது பாலியல் ரீதியானதாக மாற ஆரம்பித்தது என அவர் தெரிவித்துள்ளார்.
கால்பந்தாட்ட பயிற்சியின் பின்னர் பாடசாலை வகுப்பறையிலும் இருவரின் வீடுகளிலும் வைத்து
ஹேலி மோர்கன் தன்னுடன் பாலியல் உறவில் ஈடுபட்டார் என மேற்படி மாணவி தெரிவித்துள்ளார்.

ஹேலி மோர்கன் மீதான குற்றச்சாட்டையடுத்து அவர் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுளளார்.