புதினங்களின் சங்கமம்

மன்னார் – யாழ்ப்பாணம் பிரதான வீதியில் நடந்த மனிதாபிமான சம்பவம்; பலரும் பாராட்டு!

மன்னார் – யாழ்ப்பாணம் பிரதான வீதியில் நடந்த மனிதாபிமான சம்பவம் தொடர்பில் இளைஞர் ஒருவர் தனது முகநூலில் பதிவொன்றை வெளியிட்டுள்ள நிலையில் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவு பின்வருமாறு.,

நேற்றைய தினம் இரவு 9.00 மணியளவில் மன்னாரில் இருந்து கிளிநொச்சி நோக்கி நானும் எனது நண்பரும் மோட்டார் சைக்கிளில சென்று கொண்டுடிருந்த சமயம் 3ம் பிட்டியில் மோட்டார் சைக்கிள் காத்து போய்விட்டது. அவ் இடத்தில் இருந்து மோட்டார் சைக்கிளை உருட்டியபடி பாலியாறு நோக்கி சென்றுகொண்டு இருந்தோம் அப்போது எம்மை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் என்ன தம்பி காத்து போய்ற்றுதா என கேட்டார்?

ஆம் என்று சொன்னதும் அவ் இடத்தில் ஒட்டும் கடை இல்லை முழங்காவில் செல்ல வேண்டும் இரவு 10 மணியாகிவிட்டது தற்போது பூட்டியிருப்பார்கள் என்றவர் தனது வீட்டிற்கு எம்மை அழைத்து அமர வைத்து தேனீர் தந்து அவருடைய நண்பர்களை தொடர்புகொண்டு வரவைத்து மிகவும் சிரம்ப்பட்டு எமது மோட்டார் சைக்கிளை ஒட்டி தந்தார்கள்.

நேரம் நள்ளிரவு 12 மணியை தாண்டியது.இதுவரைக்கும் அவர்களே ஒட்டுவதற்குரிய பொருட்களை பூட்டிய கடையை திறந்து வாங்கிவந்து ஒட்டினர். 5பேர் எம்முடனே இதுவரை தமது வேலைகளை (வயல் யானைக்காவல்) பொருட்படுத்தாது எம்மை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என பாடுபட்டதை கண்ணுற்றபோது “மனிதம் இன்னும் மரணிக்கவில்லை”
நான் பணத்தை கொடுத்தபோது வேண்டாம் என்றதுடன் இதற்காக நாம் உங்களுக்கு உதவவில்லை என கூறியதுடன், இதுபோல் அன்றாடம் பலருக்கு உதவிபுரிவது எமது பழக்கமாகிவிட்டது என கூறினர்.”

அப்போது ஒன்றுமட்டும் எனக்கு புரிந்தது நாம் செய்யும் உதவி ஏதோ ஒரு விதத்தில் எமக்கு திருப்பி கிடைக்கும்”.என அவர் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.