புதினங்களின் சங்கமம்

திருமலையிலிருந்து கொரோனாவுடன் யாழ்ப்பாணம் வந்து சென்ற நபர்!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனாத் தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

344 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலேயே குறித்த நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இன்று அடையாளம் காணப்பட்ட நபர் திருகோணமலையிலிருந்து நேற்று வந்தபோது, தென்மராட்சிப் பகுதியில் வீதியில் மறித்து அவரிடம் இருந்து பிசிஆர் மாதிரிகள் பெறப்பட்டிருந்தன.

இன்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனாத் தொற்று உள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளது.

குறித்த நபர், யாழ்ப்பாணத்திலும் வட்டுக்கோட்டையிலும் சில வீடுகளுக்கு சென்று திரும்பியிருப்பதாக திருகோணமலையில் பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களுக்கு தகவல் வழங்கியிருப்பதாகவும் குறித்த நபர் வந்து சென்ற வீடுகளை அடையாளப்படுத்தும் நடவடிக்கைகளை பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் முன்னெடுத்துவருவதாகவும் கேதீஸ்வரன் அருவிக்குத் தெரிவித்தார்.