புதினங்களின் சங்கமம்

பூநகரி சங்குப்பிட்டி பாலத்துக்கு அருகில் அமரப்போகும் புத்தர்!!

கிளிநொச்சி போய்வந்தேன்; சங்குப்பிட்டியும் கண்டுவந்தேன். கண்டவற்றில் வருத்தியதும் உறுத்தியதும்.

சங்குப்பிட்டி பாலம் தாண்டி பூநகரி நோக்கிப்பயணிக்கும் போது வாகனங்கள் நிறுத்துவதாக காரணம் கூறி ஒரு வளைவை உருவாக்கியுள்ளார்கள். தற்போது வரை அதில் வாகனங்கள் தரிக்கப்பட்டு பயணிகள் ஓய்வெடுத்து செல்கின்றார்கள் என்பது உண்மைதான்.

ஆனால் அதன் நடுவே இரண்டு அரச மரங்கள் நடப்பட்டு எந்தவித சலசலப்பும் இல்லாமல் வளர்க்கப்பட்டு வருகின்றது. இன்று அவை நிழல் தரும் அளவிற்கு பெரிதாகிவிட்டன.

இங்கே கவனிக்கவேண்டிய விடயம் என்னவென்றால் வடக்கை பொறுத்தவரையில் எங்கெல்லாம் அரசமரம் இருக்கின்றதோ அங்கெல்லாம் அவர் குடியேறுகிறார் என்பதே ..(நேற்று குருந்தூரில் குடியேறியமை நினைவிருக்கலாம்)

யாழின் பிரதான நுழைவாயில்களில் ஒன்றாகிப்போன #சங்குப்பிட்டியில் வருங்காலத்தில் அவர் ஆசீர்வதித்துத் தான் வழியனுப்பி வைப்பார் போலும்.

எம் பிரதிஷ்டை செய்ய யாரேனும் பங்களியுங்கள்!!

கிருத்திகன் முகநுால் பதிவிலிருந்து…