பிரான்சில் பலியான மருத்துவபீட மாணவிகள் காதலர்களாளேயே படுகொலை!! அதிர்ச்சித் தகவல்கள்!!
யாழ்ப்பாணம் – அல்லைப்பிட்டி-மண்டைதீவுப் பகுதிகளைச் சேர்ந்த செல்லத்துரை (உடையார்) மற்றும் வேலாயுதபிள்ளை (வேவி) ஆகியோரின் பேர்த்தியான 22 வயதுடைய கார்த்திகா குலேந்திரா, பிரான்ஸில் மருத்துவத்துறையில் கல்வி பயிலும் மாணவி இம்மாதம் எட்டாம் ஆம் திகதி அன்று உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.
அதேவேளை, யாழ்ப்பாணம் மந்துவில் வடக்கு, கொடிகாமத்தைச் சேர்ந்த 18 வயதுடைய சினேகா சந்திரராசா, பிரான்ஸில் மருத்துவத்துறையில் கல்வி பயிலும் மாணவி கடந்த பதின்மூன்றாம் திகதியன்று அகால மரணமடைந்துள்ளார்.
இவ்வாறு பிரான்சில் வைத்திய பட்டப்படிப்பினை மேற்கொண்டு வந்த யுவதிகள் இருவரின் உயிரிழப்பின் பின்னணியில் அதிர்ச்சியான காரணங்கள் வெளியாகியுள்ளது.
குறித்த யுவதிகள் காதல் விவகாரங்களினால் அவர்களின் காதலர்களால் கொலை செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழீழம் , யாழ்ப்பாணம் ஆலம்பிட்டி பகுதியை சேர்ந்த 20 வயதுடைய கார்த்திகா என்ற யுவதி அவரின் காதலரின் கத்தி குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் மண்டுவில் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய ஸ்நேஹா என்ற யுவதி அவரின் காதலனால் கழுத்து நெறிக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞர்களின் புகைப்படங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர்களை கைது செய்ய பிரான்ஸ் நாட்டு காவல் துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

