புதினங்களின் சங்கமம்

யாழ் நகரப்பகுதியில் சற்று முன் வாள்களுடன் மர்மகுழு அட்டகாசம்!! பொலிஸ் ஓடி மறைந்ததா??

யாழ் நகரப்பகுதியின் முக்கிய பகுதியாக விளங்கும் பிறவுன் வீதியில் இன்று இரவு 7.30 மணியளவில் பளபளக்கும் வாள்களுடன் வந்த கொள்ளையர் கூட்டம் 4 கடைகளில் கொள்ளையடித்துச் சென்றுள்ளது. மக்கள் நெருக்கமாக வசிக்கும் போக்குவரத்து நிறைந்த குறித்த பகுதியில் நடந்த கொள்ளைச் சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பெரும் விசனம் அடைந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் முழுப் பாதுகாப்புடன் இருப்பதாக பாதுகாப்புத் தரப்பு தெரிவித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் இவ்வாறான செயற்பாடு நடைபெற்றிருப்பது பாதுகாப்புத் தரப்பின் மிகுந்த பலவீனத்தைக் காட்டுவதாக உள்ளது. இவ்வாறன நிலையில் யாழில் முஸ்லீம் தீவிரவாதிகள் தாக்குதல் நடாத்தினால் பாதுகாப்புத்தரப்பு தமிழர்கள்தானே அழிகின்றார்கள் என அசண்டையீனமாக இருக்கும் என்றே கருத்தில் கொள்ளவேண்டியுள்ளதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஒரு வேளை பாதுகாப்புத் தரப்பினரே இவ்வாறான கொள்ளையர்களை உருவாக்கி கொள்ளையடிக்க வைத்திருக்கலாம் எனவும் அப்போதுதான் பொதுமக்கள் தங்களது அவசியத்தை உணருவார்கள் என்பதற்காக பாதுகாப்புத் தரப்பே இவ்வாறான காவாலிகளை நடமாட வைத்திருக்கலாம் எனவும் சந்தேகம் எழுந்துள்ளது.