Home புதினங்களின் சங்கமம் யாழ். பல்கலையில் முள்ளிவாய்க்கால் தூபியை இடித்த போது பிக்பாஸ் லொஸ்லியா என்ன செய்தார் தெரியுமா?

யாழ். பல்கலையில் முள்ளிவாய்க்கால் தூபியை இடித்த போது பிக்பாஸ் லொஸ்லியா என்ன செய்தார் தெரியுமா?

கிளிநொச்சியில் பிறந்து, திருகோணமலையில் வளர்ந்து, கொழும்பில் வேலை செய்து பிக்பாஸ் வீட்டுக்குள் போனவர் லொஸ்லியா.,

கடந்த சீசனில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பற்றிய லொஸ்லியாவிற்கு உலகம் பூராகவுள்ள இலங்கை தமிழர்கள் ஆதரவளித்தனர், ஈழத்து பெண் என்ற காரணத்தினால் பிக்பாஸ் வீட்டுக்குள்ளும் இவருக்கு தனி மரியாதையிருந்தது, ஈழத்து பெண் என்ற காரணத்தினால் இவர் விடும் சில தவறுகளையும் பொருட்படுத்தாமல் தமிழக மக்களும் லொஸ்லியாவை நேசித்தனர்.

இப்படி ஈழம் மண்ணையும், ஈழ வரலாற்றையும், ஈழத்தமிழர்களின் ஆதரவையும் பக்கபலமாக கொண்டு புகழ் பெற்றிருக்கும் லொஸ்லியா இந்த ஈழ மண்ணுக்காகவும், ஈழ மக்களுக்காகவும் எதையும் செய்யவில்லை, அதைக்கூட நாம் பொறுத்துக்கொண்டிருந்தோம்.

ஆனால் கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் கட்டப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி உடைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து பல்கலை மாணவர்கள் உண்ணாவிரதமிருந்தனர், அரசியல் தலைவர்கள் கண்டனங்களை வெளியிட்டிருந்தனர், இந்தியாவில் தமிழக முதலமைச்சர் உட்பட்ட பல தலைவர்கள், தங்களது கண்டங்களை வெளியிட்டிருந்தனர், தவிர தமிழர்கள் இல்லாத பிரிட்டன் தலைவர்கள் கூட தங்களது வருத்தத்தையும், கண்டங்களையும் வெளியிட்டிருந்ததை தொடர்ந்து மீண்டும் முள்ளிவாய்க்கால் தூபி அமைப்பதற்கான வேலைத் திட்டங்கள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தமிழர்களை ஒடுக்கும் விதமாக இவ்வாறு ஒரு பிரச்சினை நடந்துகொண்டிருக்கும் போது, தமிழர் தலைநகரான திருகோணமலையிலிருந்துகொண்டு தமிழ் பெண் என்ற எண்ணம் கொஞ்சமும் இல்லாமல் சுற்றுலா சென்றுகொண்டிருந்தார் லொஸ்லியா.

ஒரு இனமே ஆதரவளித்து ஒவ்வொருவரையும் வளர்த்துவிடுவது, இப்படியான எங்கள் பிரச்சினைகளின் போது, உங்கள் குரலும் சேர்ந்து ஒழிக்க வேண்டும், அப்போது அந்த குரல்களுக்கான வலிமை இன்னும் அதிகரிக்கும் என்ற சிறிய எதிர்பார்ப்புடன்தான்.

இந்த பதிவின் நோக்கம் உங்கள் குரலை நாங்கள் எதிர்பார்த்தோ, அல்லது நீங்கள் குரல் கொடுப்பதால் இங்கு பிரச்சினைகளுக்கு தீர்வும் கிடைத்து விடுமோ என்று இல்லை, மாறாக தமிழ் மீதான, ஈழத்து மண் மீதான உணர்வு மட்டம் உங்களுக்கு எந்தளவு இருக்கின்றது என்பதை, ஈழப்பெண் என்ற காரணத்தினால் உங்களுக்கு ஆதரவளிப்போருக்கு உணர்த்தவே.

நடராசா ஜெயகாந்தன்.