புதினங்களின் சங்கமம்

மட்டக்களப்பு எல்லையில் 6 தமிழர்கள் கடத்தல்? அத்துமீறி நுழைந்துள்ள சிங்களவர்களின் கைவரிசை?

மட்டக்களப்பு மயிலத்தமடு மற்றும் மாதவணை எல்லை பகுதியில் ஆறு பண்ணையாளர்களை, அந்த பகுதியில் அரசினால் குடியமர்த்தப்பட்டள்ள சிங்கள விவசாயிகள் இன்று சனிக்கிழமை காலை கடத்திச் சென்று கட்டிவைத்து அடித்ததுடன் அவர்களை இனம் தெரியாத இடத்திற்கு கடத்திச் சென்றுவிட்டதாக பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இது குறித்து தெரியவருவதாவது,

மட்டக்களப்பு மயிலத்தமடு மற்றும் மாதவணை எல்லை பகுதியில் 06 பண்ணையாளர்களை இன்று காலை சிங்கள விவசாயிகள் சிலர் கடத்திச் சென்று கட்டிவைத்து அடித்ததுடன் பின்னர் அவர்களுடைய அனைத்து தொலைபேசிகளையும் பறித்து வைத்தவுடன் அவர்களுடைய தொடர்புகள் அனைத்தையும் துண்டித்து அவர்கனை இனம் தெரியாத இடத்திற்கு கடத்திச் சென்றுவிட்டதாக நேரில் கண்ட பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இதனால் ஒரு பதட்டமான சூழ்நிலை மயிலத்தமடு மற்றும் மாதவணைப் பகுதியில் ஏற்பட்டுள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.

அத்தோடு கடத்தப்பட்ட 6 பண்ணையாளர்களையும் தேடிச் சென்ற சக பண்ணையாளர்களையும் அத்துமீறி பயிர் செய்கையில் ஈடுபட்டு வருபவர்கள் அச்சுறுத்தி துரத்தியதாகவும் அதனால் பண்ணையளர்கள் அச்சத்தில் திரும்பி வந்துள்ளதாக பண்ணையாளர்களின் தலைவர் தெரிவித்தார்.

இதேவேளை நேற்றிரவு வெள்ளிக்கிழமை இனம் தெரியாதவர்கள் பலர் ஆயுதங்களுடன் வந்து பண்ணையாளர்களை அச்சுறுத்தியதாகவும் பண்ணையாளர்களின் குடியிருப்புக்களை சோதனை செய்து ஆயுதங்கள் வைத்து இருக்கிறீர்களா என கேட்டு அச்சுறுத்தியதாக அவ்விடத்தில் இருந்த பண்ணையாளர்களின் தலைவர் தெரிவித்தார்.

மேலும் இது குறித்து கரடியணாறு பொலிசிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ய சென்றுள்ளதாக பாதிக்கப்பட்ட பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.அத்தோடு இது குறித்து தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.