யாழ் வடமராட்சி நபர் திருகோணமலையில் கொரோனா தொற்றுடன் அடையாளம் !!
யாழ்ப்பாணம் வடமராட்சி அல்வாய் பகுதியைச்சேர்ந்த நபர் ஒருவர் பிசிஆர் பரிசோதனையில் திருகோணமலை மாவட்டம் மூதூரில் வைத்து இனங்காணப்பட்டார்.
இவர் 19/12 இலிருந்து 06/01வரை பருத்தித்துறை அல்வாயிலுள்ள தனது வீட்டில் தங்கியிருந்து கண்ணிவெடியகற்றும் நிறுவன வேலைநிமிர்த்தம் மூதூர் செல்லும்போதே இனங்காணப்பட்டார்.
இவரது குடும்பம் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடுஇவரது இருபிள்ளைகளும் பருத்தித்துறைபகுதியிலுள்ள ஆரம்ப பாடசாலையென்றில் நடாத்தப்பட்ட வகுப்புகளுக்கு 5,6,7 ஆம் திகதிகளில் பங்குபற்றியதாக விசாரணைகளின்போது தெரியவந்ததைத் தொடர்ந்து அப்பிரதேச பொதுசுகாதார பரிசோதகர் ஆ.ஜென்சன் றொனால்ட்டினால் அப்பாடசாலையும் நான்கு ஆசிரியர்களும் மற்றும் முப்பத்திரெண்டு மாணவர்களும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர். ஏனைய தொடர்பாளர்களை இனங்கண்டு நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பணியில் சுகாதாரப்பிரிவு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
மேலும் இப்பாடசாலையின் அதிபர் ஏற்கனவே புலோலி தொற்றாளர் சென்றுவந்த தொலைத்தெடர்பு சேவைநிலையத்துக்கு சென்றதால் தனிமைப்டுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

