புதினங்களின் சங்கமம்

சாந்தமருது தாக்குதல் வீடியோ வெளியாகியது!! காட்சிகள் இதோ!!(Video)

கல்முனை – சம்மாந்துறை பகுதியில் இடம்பெற்ற மோதல் காரணமாக கிழக்கு மாகாணத்தின் இயல்பு
நிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

கல்முனை பகுதியில் பதுங்கியிருந்த ஐ.எஸ் பயங்கரவாதிகளின் வீட்டினை சோதனையிடும் போது
மோதல் சம்பவம் ஏற்பட்டது.

இதன்போது சிறப்பு அதிரடி படையினர் மற்றும் பயங்கரவாதிகளுக்கு இடையில் கடும் துப்பாக்கி
பிரயோகம் இடம்பெற்றது.

இதனை ஈடுகொடுக்க முடியாத ஐ.எஸ் பயங்கரவாதிகள் தற்கொலை குண்டுத்தாக்குதலை நடத்தினர்.

இந்த அனர்த்தம் காரணமாக சிறுவர்கள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர். இருவர் ஆபத்தான
நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பயங்கரவாதிகளின் வீட்டினை அதிரடிபடையினர் எவ்வாறு முற்றுகையிட்டனர் என்பது தொடர்பான
காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.