புதினங்களின் சங்கமம்

கொவிட 19 நிதியுதவி என்ற பெயரில் இலங்கை இஸ்லாமிய நிறுவனங்களுக்கு தீவிரவாதிகள் நிதியுதவி!! ரஷ்ய தூதுவர் எச்சரிக்கை!!

கொவிட 19 நிதியுதவி என்ற பெயரில் இஸ்லாமிய தொண்டு நிறுவனங்களுக்கு இஸ்லாமிய தீவிரவாதிகளால் நிதி அனுப்பப்படுவதாகவும் இது குறித்து அவதானமாக இருக்கமாறும் இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் yury Materiy  பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்  ரியர் அட்மிரல் சரத் வீரசேகராவிடம் எச்சரித்துள்ளார். கடந்த வாரம் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்  ரியர் அட்மிரல் சரத்  வீரசேகரவுக்கும் ரஷ்ய தூதுவருக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே  ரஷ்ய தூதுவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.அத்துடன் ஆட்களை அனுப்பும் வேலைகளையும் கொவிட் 19 உதவி என்ற பெயரில் இஸ்லாமிய தீவிரவாதிகள் மேற்கொண்டு வ்ருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.  ஏப்ரல் 19 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றியும் ரஷ்ய தூதுவர் இந்தச்சந்திப்பின் போது கேட்டறிந்து கொண்டார்
இதற்குபதிலளித்த  பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்  ரியர் அட்மிரல் சரத்  வீரசேகர முன்னைய அரசாங்கம் பாதுகாப்பு விடயத்தில் அக்கறையின்றி இருந்ததாகவும் தற்போதைய அரசாங்கம் புலனாய்வு கட்டமைப்பை 3-7 ஆக அதிகரித்திருப்பதாகவும் தெரிவித்தார் அத்துடன்நடைபெற்ற எட்டு தாக்குதல்களுடனும் சம்பந்தப்பட்ட 267 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்கள் மீதான குற்றப்புலனாய்வு விசாரணைகள் யாவும் முடிவடைந்து சட்டமா அதிபரிடம் மேலதிக நடவடிக்கைக்காக அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்  ரியர் அட்மிரல் சரத்  வீரசேகர தெரிவித்துள்ளார். 2021ம் ஆண்டு ரஷ்யாவில்  நடைபெறவுள்ள சர்வதேச மட்டத்திலான பாதுகாப்பு தொடர்பான கருத்தரங்கிலும் அமைச்சு மட்ட உறுப்பினர்களை கலந்து கொள்ளும்மாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.             பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.