நெடுந்தீவிலும் தாக்குதல் திட்டமா?? பிடிபட்ட முஸ்லீமுக்கு விளக்கமறியல்!!
நெடுந்தீவு பிரதேசத்தில் தொலைபேசி சாதனங்கள் மற்றும் அவற்றுக்குரிய சில சிம் அட்டைகளுடன்
முஸ்லீம் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நெடுந்தீவு பொலிஸாரினால் கைது செய்யப்பட சந்தேகநபர் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை
ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் பதில் நீதிவான் இ. சபேசன் முன்னிலையில் முற்படுத்தப்பட்டார்.
அதன் போது அவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, சந்தேக நபர் வவுனியாவில் இருந்து
நெடுந்தீவில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு தனது மனைவியுடன் வந்திருந்தார் எனவும் ,
பின்னர் சொந்த அலுவல்கள் காரணமாக நெடுந்தீவில் இருந்து திரும்பும் போது இறங்குதுறையில்
வைத்து பொலிஸார் கைது செய்ததாக மன்றுரைத்தனர்.
அத்துடன் நெடுந்தீவில் உள்ள வீட்டார் , வீட்டினை சுத்தம் செய்யும் போது தமது பழைய
தொலைபேசிகள் மற்றும் அவற்றுக்கு உரிய சாதனங்கள், சில சிம் அட்டைகள் என்பவற்றை ஒரு
பாக்கில் போட்டு வைத்திருந்ததாகவும் , கைது செய்யப்பட்ட நபர் நெடுந்தீவில் இருந்து
கிளம்பும் போது , அந்த பையையும் மாறி தூக்கி வந்த சமயமே பொலிஸார் கைது செய்தனர் என
தெரிவித்தார்.
சந்தேக நபருக்கும் தீவிரவாத அமைப்புகளுக்கும் இடையில் தொடர்பு உள்ளதா என்பது தொடர்பில்
தாம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் , விசாரணைக்கு ஏதுவாக சந்தேகநபரை
விளக்கமறியலில் வைக்குமாறு பொலிஸார் கோரினார்.
அதனை அடுத்து சந்தேக நபரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில்
வைக்குமாறு பதில் நீதிவான் உத்தரவிட்டார்.