புதினங்களின் சங்கமம்

யாழ்ப்பாணத்தில் சமூகத் தொற்றாக மாறியது கொரோனா!! ஆட்டோச் சாரதிக்கு நடந்தது என்ன?

மருதனார் மட சந்தையில் எழுந்தமானமாக மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதியானது.

மருதனார்மடம் சந்தையில் மரக்கறி கடை வைத்துள்ள ஒருவரே தொற்றிற்குள்ளாகினார். அந்த
பகுதியில் உள்ள முச்சக்கரவண்டி சாரதிகளிடம் எழுமாற்றாக பிசிஆர் சோதனை
மேற்கொள்ளப்பட்டது. குறிப்பிட்ட நபரும் முச்சக்கர வண்டி வைத்திருப்பவர் என்ற அடிப்படையில்,
பிசிஆர் சோதனைக்குள்ளானார். இதன்போது அவருக்கு தொற்று உறுதியானது.

யாழ்ப்பாணத்தில் எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையில் அடையாளம் காணப்பட்ட முதலாவது தொற்றாளர் இவராவார்.

அவருக்கு எப்படி தொற்று ஏற்பட்டது என்பது இன்னும் உறுதியாகவில்லை.