புதினங்களின் சங்கமம்

கிளிநொச்சியில் பிரேதத்தை மாற்றிக் கொடுத்த ஆசுப்பத்திரி!! கொரோனா சடலம் என அச்சம்!!

கிளிநொச்சி வைத்தியசாலையில் உயிரிழந்தவரின் சடலம் மாறி வழங்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம்
இடம்பெற்றுள்ளது. பிசிஆர் பரிசோதனை முடிந்த சடலமென, பிசிஆர் பரிசோதனை
முடிவடையாதவரின் உடல் வழங்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் நேற்றைய தினம் இரண்டு மரணங்கள் இடம்பெற்றது. ஒன்று
கிளிநொச்சி திருவையாறு பகுதியினைச் சேர்ந்த 55 வயது மதிக்கதக்க கோவிந்தன்
மோகனதாஸ். இரண்டாவது கிளிநொச்சி கனகாம்பிகை குளத்தைச் சேர்ந்த கந்தையா செல்வராசா (61) ஆகிய இருவரும் சுகயீனம் காரணமாக  மரணமடைந்துள்ளனர். இருவரும் மாரடைப்பு காரணமாக மரணமடைந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

நேற்றைய தினம் வைத்தியசாலைக்கு சென்ற மோகனதாஸ் கொரோனா சந்தேகத்தின் பெயரில் அதற்குரிய தனிமைப்படுத்தல் விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில் இரவு மரணமடைந்துள்ளார்.

https://scontent.fcmb4-1.fna.fbcdn.net/v/t1.0-9/129955929_1491695987702290_2937670893586691649_o.jpg?_nc_cat=100&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=59ypo2d8eIYAX_fKpJ7&_nc_ht=scontent.fcmb4-1.fna&oh=eb8edeccad53c4843afd863e08692755&oe=5FF51287

இதேவேளை செல்வராசா நேற்றிரவு நெஞ்சு வலி காரணமாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போதே மரணமடைந்துள்ளார்.

இருவருக்கும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் தெரிவித்த வைத்தியசாலை அதன்
மாதிரிகளை பெற்று பரிசோதனைக்காக அனுப்பியிருந்தார்கள்.

இதில் மோகனதாஸ் (65) என்பவரின் பிசிஆர் பரிசோதனை முடிவுகள் தொற்று இல்லை என
வந்திருந்ததால் அவரது உடலை உறவினர்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
இதேவேளை சாவடைந்த மற்றையவரான செல்வராசாவின் (61) பிசிஆர் பரிசோதனைக்கு மாதிரிகள் இன்று காலையே அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் வைத்தியசாலையின் பிரேத அறையில் மோகனதாஸுக்கு (65)
போஸ்மோட்டம் செய்வதற்கு பதிலாக செல்வராசாவுக்கு (61) செய்யப்பட்டு அவரது
உடல் இன்று (07) பிற்பகல் சுமார் 2.30 மணியளவில் திருவையாறில் உள்ள அவரது
இல்லது எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

எடுத்துச் செல்லப்பட்ட உடல் வீட்டில் பெட்டி திறந்து வைக்கப்பட்ட நிலையில் மனைவி உட்பட
அனைவரும் சோகத்தில் கதறி அழுதுகொண்டிருக்க இறந்த  மோகனதாஸின் 15 வயது மகள் இது தந்தையின் உடல் இல்லை கதறிய போதே உடல் மாறி அனுப்பபட்ட விடயம் தெரியவந்தது. இப்போது மீண்டும் திருவையாறு வீட்டிலிருந்து கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு உடல்
கொண்டுவரப்பட்டுள்ளது. அத்துடன் மோகனதாசின் (65) உடலுக்கான பிரேத
பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உடல் உறவினர்களிடம் கையளிப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகிறது.

இதேவேளை, செல்வராசா (61) என்பவரது பிசீஆர் முடிவுகள் இன்னமும்
கிடைக்கப்பெறாத நிலையில் அவருக்கு சிலவேளை கொரோனா தொற்று இருக்குமாயின் பிரேத
பரிசோதனை செய்த வைத்தியர், ஊழியர்கள் மற்றும் சாவீட்டில் கலந்துகொண்ட உறவினர்கள் என
அனைவருக்கும் அத்தொற்றுப் பரவும் பாரிய அபாய நிலை தோன்றியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் மும்முரமாக உள்ள
நிலையில் தொடர்ந்தும் இவ்விடயத்தில் கிளிநொச்சி வைத்தியசாலை நிர்வாகத்தின் அக்கறையீனமான  செயற்பாடுகள் உறவினர்கள் மட்டுமன்றி பொது மக்களிடையேயும் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.