புதினங்களின் சங்கமம்

சற்று முன் பொலிஸ்மா அதிபர் பூஜித தனது பதவியை இராஜினமா செய்தார்!!

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவையும் தமது பதவிகளில் இருந்து விலகுமாறு ஜனாதிபதி அறிவித்து இருந்த நிலையில் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ நேற்று ராஜினாமா செய்தார்.இந்நிலையில் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர சற்றுமுன்னர் ராஜினாமா செய்துள்ளார்.கடந்த ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் பொறுப்பேற்று இவ்வாறு பதவி விலகுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்து இருந்தார்.புலனாய்வுப் பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களை உரிய வகையில் பயன்படுத்தி, இழப்பை தடுக்க நடவடிக்கை எடுக்காமை காரணமாக ஜனாதிபதியால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகின்றது.பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர சற்றுமுன்னர் ராஜினாமா.