நல்லூர் கோவில் வீதியில் வசிக்கும் பெண் ஒருவருக்கு கொரோனா!
யாழ்ப்பாணம் நல்லூரில் 72 வயதுடைய பெண் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று யாழ்.பல்கலைக்கழக பரிசோதனைக்கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் மூவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கடந்த 11ஆம் திகதி கொழும்பிலிருந்து நல்லூர் கோவில்வீதிக்கு வந்து சுகாதாரப் பதிவு ஒன்றுக்கும் உட்படாத நிலையில் இருந்த பெண் ஒருவர் சுகாதார அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய சில நாட்களுக்கு முன்னர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேபோல காங்கேசன்துறை கடற்படைத் தளத்தைச் சேர்ந்த கடற்படையினர் இருவருக்கும் இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கேதீஸ்வரன் தெரிவித்தார்.

