புதினங்களின் சங்கமம்

கொழும்பிலிருந்து வந்தவர் யாழ் சாப்பாட்டுக்கடையில் சடலமாக மீட்பு!! கொரோனா அச்ச பரபரப்பு!!

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் பணியாற்றும் நபர்
உணவகத்தில் தங்கியிருந்தவேளை உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் மூன்று தினங்களுக்கு முன்னரே கொழும்பில் இருந்து வருகை தந்திருந்தார் என
தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் சடலம் மீட்கப்பட்ட உணவகத்தை உடனடியாக தமது பாதுகாப்பின் கீழ் கொண்டு வந்த
யாழ்ப்பாண பொலிஸார் உணவகத்தில் பணியாற்றும் எவரையும் உணவகத்தை விட்டு வெளியேற
அனுமதிக்கவில்லை.

இதேவேளை, சடலம் யாழ்.போதனா வைத்திய சாலையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு
செல்லப்பட்டுள்ளது. அத்துடன் பி.சி.ஆர். பரிசோதனையும் முன்னெடுக்கப்படவுள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றது