புதினங்களின் சங்கமம்

யாழ் தமிழர்களை கைகழுவிவிட்டு சட்டத்தரணி குருபரன் நாட்டை விட்டு “எஸ்கேப்”

 

யாழ்ப்பாணத்தில் உள்ள நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்றங்களில் தமிழர்களுக்கு சார்பான, யுத்த காலத்தில் அநியாயமாக கொல்லப்பட்ட தமிழர்களின் உறவுகளுக்கு ஆதரவாக நீதிக்களத்தில் நின்று வந்த யாழ் பல்கலைக்கழக சட்டபீடாதிபதியாகவும் இருந்துவந்த குமாரவடிவேல் குருபரன் நாட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ளார் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் பணியினை சில மாதங்களுக்கு முன் ராஜினாமா செய்திருந்த நிலையில் அவருக்கு இங்கிலாந்தின் ஒஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றுவதற்கு அழைக்கப்பட்டிருந்ததனடிப்படையில் சட்டத்தரணி கலாநிதி குருபரன் இங்கிலாந்திற்கு தனது குடும்பத்துடன் சில தினங்களுக்கு முன் பயணமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.

இது தொடர்பான உண்மைத்தன்மையை தற்போது உறுதிப்படுத்த முடியாத சூழ்நிலையில், உண்மையை உறுதிப்படுத்த முயற்சித்து வருகின்றோம் என்பது குறிப்பிடத்தக்கது.