புதினங்களின் சங்கமம்

பதவி விலகினார் பாதுகாப்பு செயலாளர்!! விலக மறுக்கின்றார் பொலிஸ்மா அதிபர்!!

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ இன்று தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதியிடம் ஒப்படைத்துள்ளார். எனினும், பதிய பாதுகாப்பு செயலாளர் நியமிக்ப்படும் வரை அவரே பதவியில் தொடர்வார்.

புதிய பாதுகாப்ப செயலாளராக நியமிக்கப்படவிருந்த முன்னாள் இராணுவத்தளபதி தயா
ரத்னாயக்க, தற்போதைய நிலையில் பாதுகாப்பு செயலாளர் பதவியை ஏற்க விரும்பவில்லையென
சொல்லப்படுகிறது. இதனால் புதிய இராணுவத்தளபதியை நியமிப்பதில் சிக்கல் நீடிக்கிறது.

அதேவேளை, பொலிஸ்மாஅதிபர் பூஜித ஜயசுந்தர இதுவரை பதவி விலகல் கடிதத்தை
ஜனாதிபதியிடம் ஒப்படைக்கவில்லை. அவர் உடனடியாக பதவி விலகும் சாத்தியமில்லையென
தெரிகிறது.

பொலிஸ்மா அதிபர் பதவி விலகாவிட்டால் அவருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பிரேரணை
கொண்டு வர சு.க தீர்மானித்துள்ளது. அந்த தீர்மானத்திற்கு சாதாரண பெரும்பான்மை
கிடைத்தாலே, அவரை பதவி நீக்க முடியும்.