இலங்கை அரசாங்கத்தின் உயரிய விருது பெற்றவனே தற்கொலை குண்டுதாரி!! அதிரவைக்கும் தகவல்!! (Photos)
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தாக்குதல் நடத்திய தற்கொலை குண்டுதாரிகளில் ஒருவர் இலங்கை அரசாங்கத்திடமிருந்து உயரிய விருது பெற்றவர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கொழும்பிலுள்ள நட்சத்திர விடுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்திய சகோதரர்களில் ஒருவரான இன்ஷாஃப் இப்ராஹிம் 2016ஆம் ஆண்டுக்கான அரச ஏற்றுமதி விருதைப் பெற்றவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விருது அக்காலப்பகுதியில் இராஜாங்க அமைச்சராகவிருந்த சுஜீவ சேனசிங்கவினால் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்த ஒளிப்படத்தை பிரித்தானிய ஊடகமொன்று வெளியிட்டுள்ளது.
தற்கொலை குண்டுதாரியின் தந்தை இப்ராஹிம் விருதை பெற்றுக்கொள்வதையும், குண்டுதாரியான இன்ஷாஃப் அருகில் நிற்பதையும் குறித்த ஒளிப்படத்தில் காணக்கூடியதாக உள்ளது.