புதினங்களின் சங்கமம்

இணுவில் கந்தசுவாமி ஆலயத்துக்கு அருகில் தேடுதல் (Photos)

யாழ்.இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் வெடிபொருட்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சற்று முன்னர் பாரிய தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த ஆலயத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சந்தேகத்துக்கு இடமான மோட்டார் சைக்கிள் மற்றும், அவ்வாலயத்துக்கு அருகில் உள்ள விளையாட்டு மைதானத்தில் கைவிடப்பட்டிருந்த பொதி ஒன்று தொடர்பிலேயே சோதனை நடவடிக்கை நடத்தப்பட்டுள்ளது.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் அங்கு இராணுவத்தின் குண்டு செயலிழப்பு செய்யும் பிரிவினரை அழைத்து குறித்த பகுதியில் சோதனை நடத்தினர்.

இதன்போது கோவிலுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் உரிமையாளர் வந்துள்ளார். அவரிடம் விசாரணை நடத்திய பொலிஸார், மோட்டார் சைக்கிளை சோதனையிட்ட பின்னர் உரிமையாளரிடம் கையளித்துள்ளனர்.

மேலும் குறித்த பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் இருந்த பொதியினையும் சோதனை செய்த இராணுவத்தினர் அப் பொதியினை அங்கிருந்த அகற்றிச் சென்றுள்ளனர்.

Image may contain: one or more people, tree and outdoorImage may contain: one or more people, tree and outdoorImage may contain: sky, cloud and outdoorImage may contain: 2 people, outdoor