Home புதினங்களின் சங்கமம் நண்பனைக் காப்பாற்றச் சென்ற இளைஞனும் நண்பனும் விபத்தில் பலி: மாத்தளையில் நடந்தது என்ன?

நண்பனைக் காப்பாற்றச் சென்ற இளைஞனும் நண்பனும் விபத்தில் பலி: மாத்தளையில் நடந்தது என்ன?

குருநாகலில் இருந்து மாத்தளை நோக்கி இரண்டு வெவ்வேறு மோட்டார் சைக்கிள்களில் பயணித்த இரண்டு நண்பர்கள் அடுத்தடுத்து இடம்பெற்ற வீதி விபத்துகளில் சிக்கி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்தவர்கள் 28 மற்றும் 24 வயதுடைய நண்பர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது:

முதல் விபத்து: குருநாகலில் இருந்து மாத்தளை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தபோது, யட்டவத்தை பகுதியில் வைத்து நண்பர்களில் ஒருவரது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் அமைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை கூண்டுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் தனது நண்பர் படுகாயமடைந்ததைக் கண்ட, பின்னால் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த நண்பர் உடனடியாக அவரை முச்சக்கரவண்டி ஒன்றில் ஏற்றி வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தார்.

காயமடைந்த நண்பரை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டியைப் பின்தொடர்ந்து தனது மோட்டார் சைக்கிளில் சென்ற மற்றைய நண்பரும், எஹெட்டுவெவ பகுதியில் வைத்து எதிரே வந்த கார் மற்றும் மின்கம்பம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானார்.

இரண்டாவது விபத்தில் சிக்கிய இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

அதேவேளை, முதலில் விபத்துக்குள்ளாகி முச்சக்கரவண்டியில் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவரது நண்பரும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments