மட்டக்களப்பு படுவான்கரை பகுதியில் இன்று ஏற்பட்ட கோர விபத்தில் ஒருவர் பலி! (Photos)
மட்டக்களப்பு படுவான்கரை பகுதியின் பட்டிப்பளை பிரதேச சபைக்குட்பட்ட அம்பிளந்துறை பிரதான வீதியில் இன்று ஏற்பட்ட கோர விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்!
சுப்ரமணியம் பரணிதரன் எனும் மண்டூர் பலாச்சோலையைச் சேர்ந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தானது இன்று காலை அம்பிளந்துறை பிரதான வீதியூடாக பயணம் செய்த போது ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றும் அவருடன் பயணம் செய்த ஒருவர் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளார் குறித்த நபரினை பொலிசாரினால் தேடப்பட்டு வருகிறது.
குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிசோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


