புதினங்களின் சங்கமம்

கொரொனா நோயாளியை காரில் திருகோணமலை அழைத்து வந்த வைத்தியரால் அலங்கோலம்!!

வைத்தியர் ஒருவரால் கொழும்பிலிருந்து திருகோணமலையில் நடைபெற்ற மரணச் சடங்குக்கு அழைத்துவரப்பட்ட நபர் ஒருவருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதால் திருகோணமலையில் 18 பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரியருவதாவது,

திருகோணமலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மரணச் சடங்கு ஒன்று நடைபெற்றிருந்தது. அந்த நிகழ்விற்கென கொழும்பில் கொரோனா அறிகுறிகளுடன் காணப்பட்ட நபர் ஒருவர் வைத்தியர் ஒருவரின் காரில் அழைத்துவரப்பட்டிருந்தார். குறித்த நபருக்கு கொரோனாத் தொற்றுக்கான அறிகுறிகள் காணப்பட்டிருந்த நிலையில் அவருக்கு கொழும்பில் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

பிசிஆர் பரிசோதனை முடிவுகள் வெளிவர முன்பாகவே குறித்த நபரை வைத்தியர் திருகோணமலைக்கு அழைத்துவந்திருக்கின்றார்.

திருகோணமலைக்கு வந்த குறித்த நபர், மரணச் சடங்களில் மூன்று மணி நேரமாக பங்குகொண்டிருந்திருக்கின்றார்.

இந்நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்த நிலையில் கொழும்பில் சுகாதாரத் துறையினர் அவரைத் தொடர்புகொள்ள முயன்ற நிலையில் அவரைத் தொடர்புகொள்ள முயற்சித்திருக்கின்றனர்.

அதன் பின்னரேயே அவர் வைத்தியரால் திருகோணமலைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தமை தெரியவந்திருக்கின்றது.

இதனை அடுத்து திருகோணமலை சுகாதார உத்தியோகத்தர்களுக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் மரண வீட்டில் பங்கேற்றவர்கள் 18 பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களை சுயதனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நபர் ஒருவரை வைத்தியர், தான் வைத்தியர் என்ற அடையாளத்தைப் பயன்படுத்தி பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கடந்து ஒரு மரண நிகழ்விற்கு அழைத்துவந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.