புதினங்களின் சங்கமம்

அரசாங்கத்தின் 5000 ரூபாவிற்காக உயிரை விட்ட பெண்; காரணம் என்ன?

கொரோனா கால நிவாரணமாக அரசு வழங்கும் ரூபா ஜயாயிரம் கொடுப்பனவு பெற வரிசையில் காத்திருந்த ஒரு பெண் கந்தானையில் மயக்கடைந்து விழுந்து இறந்த பரிதாப சம்பவம் நேற்று ஞாயிற்றுகிழமை இடம்பெற்றுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு அரசாங்கம் வழங்கும் உதவித் தொகையைப் பெறுவதற்காக வரிசையில் காத்திருந்தபோது, காதிரானாவில் வசிக்கும் 62 வயதான பாதிக்கப்பட்டவர் கிராம சேவகர் அலுவலக வளாகத்தில் மயங்கி கீழே விழுந்துள்ளார்.

ஆனாலும் அவருக்கு உதவுதற்கு யாரும் முன்வரவில்லை.இரண்டு இளைஞர்கள் மாத்திரம் வைத்தியசாலைக்கு அழைத்து சென்றுள்ள நிலையிலும் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மேலும் அவரிடம் பி.சி.ஆர் பரிசோதனை நடத்துமாறு நீர்கொழும்பு சட்ட மருத்துவ அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.