Vampan memesபுதினங்களின் சங்கமம்

யாழில் எங்களுக்கு ஒரு சட்டம்; உங்களுக்கு இன்னொரு சட்டமா? மண்டப உரிமையாளர்கள் கேள்வி!! (Photos)

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் எமது மண்டபங்களில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றியும் 50 பேருக்கு மேல் பங்குகொண்டால் தடை எனக் கூறியவர்கள் தற்போது முழுமையாகத் தடை செய்த பின்பு தமது மண்டபத்தில் 200 பேருடன் கூட்டத்தை நடத்தியமை எந்தவகையில் நியாயமானது என மண்டப உரிமையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவித்ததாவது:-

“உணவகங்களில் எவரும் அமர்ந்து உணவு உண்ண முடியாது என விதிக்கப்பட்ட தடையை சுகாதாரம் கருதி உணவக உரிமையாளர்கள் ஏற்று கடைப்பிடிப்பதால் வழமையான வியாபாரம் பாதியாகக் குறைவடைந்துள்ளது. யாழ். நகரில் மட்டும் உணவகங்களில் பணியாற்றிய 200 இற்கும் மேற்பட்டவர்களை உணவக உரிமையாளர்கள் இடைநிறுத்தியுள்ளனர். இன்னும் சில உணவகங்கள் முழுமையாகவே பூட்டப்பட்டு விட்டன.

இதேபோன்று மண்டபங்களில் பணியாற்றிய பல நூறு பணியாளர்கள் அதாவது சமையலாளர்கள், மண்டப பராமரிப்பாளர்கள் என அனைவரும் தொழிலை இழந்து நிற்கின்றனர். இதற்கான அறிவுறுத்தலை வழங்கியவ்கள், பரிசோதனையில் ஈடுபட்டவர்கள் அனைவரும் மாவட்ட செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் ஒரே தடவையில் 200 இற்கும் மேற்பட்டோர் அருகருகே அமர்ந்து 3 மணிநேரம் கலந்துரையாடியுள்ளனர்.

அவ்வாறானால் சட்டம் – ஒழுங்கு ஏழைகளுக்கு மட்டுமா? அது அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் பொருந்தாதா? தினம் உழைத்து உண்பவன் வயிற்றில் மண் அள்ளிப்போட்டு விட்டு அதிகாரிகள் குளு குளு அறையில் அளப்பறை நடத்தியுள்ளனர். அதற்கும் மேலாக ஊரங்குச் சட்டம் உள்ள மாவட்டத்தில் இருந்தும் அதிபயங்கரமாக கொரோனாத் தொற்று உள்ளது எனக் கூறப்படும் மாவட்டத்தில் இருந்தும் பலர் வந்திருந்தனர்.

இவை அனைத்தும் இடம்பெறும்போது எமது சுகாதார அதிகாரிகள் அனைவரும் ஓடி ஓளித்து விட்டனர். அவர்கள் சென்ற பின்பு அதாவது கள்ளன்போன பின்பு விசுவா பொல்லை எடடா என நகரின் மத்தியில் வந்து நின்று படம் காட்டுவர்” – என்றனர்.