புதினங்களின் சங்கமம்

நண்பனைக் காப்பாற்றவில்லை!! கிளிநொச்சியில் கடவுள் சிலைகளை அடித்து உடைத்த இளைஞன்!!

நண்பன் உயிரிழந்த விரக்தியில் குாவில் விக்ரகங்களை அடித்து உடைத்த இளைஞர் ஒருவரை தருமபுரம் பொலிசார் கைது செய்துள்ளனர்.

கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியில் கடந்த ஜனவரி மாதம் 26 ஆம் திகதி கோவில் ஒன்றில் ஒரு இளைஞர் துாக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீ்ட்க்கப்பட்டார்.

குறித்த இளைஞரின் நண்பர் ஒருவர் நேற்று முன்தினம் இரவு குறித்த கோவிலுக்குள் சென்று நண்பனை கடவுள் காப்பாற்றவில்லை என தெரிவித்து கோவில் விக்கிரகங்கள், சிலைகளை அடித்து நொறுக்கியுள்ளார்.

கோவில் நிர்வாகத்தினர் பொலிசாருக்கு வழங்கிய முறைப்பாட்டுக்கமைய நேற்று குறித்த இளைஞரை பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது இளைஞரின் உருக்கமான பதிலை கேட்டு கோவில் நிர்வாகத்தினர் அவரை விடுதுலை செய்யும்படி தெரிவித்ததை அடுத்து இளைஞர் விடுவிக்கப்பட்டார்.