புதினங்களின் சங்கமம்

மட்டக்களப்பில் ‘நான் அவன் இல்லை’ படப் பாணியில் பெண்களுடன் லீலைகள்!! வீடியோக்களும் சிக்கியது!!

மட்டக்களப்பில் வைத்தியர் எனவும் இராணுவ புலனாய்வு எனவும் பொலிஸ் அதிகாரிகள் தனது நண்பர்கள் என தெரிவித்து வீடுகளில் கொள்ளை மற்றும் கமராமூலம் பெண்களை படம் எடுத்து,

அவர்களை அச்சுறுத்தி நீண்ட காலமாக பணம் பறித்துவந்த வாவிக்கரையைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை ஞாயிற்றுக்கிழமை (1) திகதி பொலிசார் கைது செய்ததுடன்,

அவரிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட கையடக்க தொலைபேசிகள் கைக்கடிகாரம், கமராக்கள், சப்பாத்து கையுறைகள், மடிகனிணி போன்ற பல பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிசார் தெரிவித்தனர்.

கடந்த 29 ம் திகதி மேல்மாடி வீதியிலுள்ள வீடு ஒன்றில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் யன்னலை கழற்றி உள்நுழைந்து அங்கிருந்த 572 அமெரிக்க டொலர் ,

சிங்கப்பூர் டொலர், கைக்கடிகாரம் போன்ற பொருட்களை திருடிக் கொண்டு யன்னல் இருந்த மாதிரியே பூட்டிவிட்டு சென்றுள்ளான்.

வீட்டின் உரிமையாளர் வீட்டிற்கு வந்துபோது திருட்டுப்போயுள்ளது தெரியவந்ததுடன் பணபரிமாற்றம் செய்யும் கடைகளுக்கு சென்று டொலர் மாற்றியவர்கள் தொடர்பாக தகல்களை பெற்ற போது ஒரு கடையில் 572 டொலர் மாற்றியதாக,

தகவல் தெரியவந்தது இதனையடுத்து அங்கிருந்த சிசிரி கமராவை சோதனையிட்டபோது மனோச் தலைக்கவசத்துடன் சென்று டொலரை மாற்றியதுடன்,

மோட்டர்சைக்கில் இலக்கம் என தகவல்கள் கிடைக்கப் பெற்றதுடன் பொலிசாரிடம் முறைப்பாடு செய்ததையடுத்து,

வாவிக்கரை நோஸ் உத்தியோகத்தர் பொலிஸ் பரிசோதக வீதியைச் சோர்ந்த மனோச் என்றழைக்கப்படும் தவராஜா மனோச்ராஜ் கைது செய்ததுடன்,

அவரின் வீட்டில் இருந்து 10 கையடக்க தொலைபேசிகள் 7 கை மணிக்கூடு, மடிகனிணி, வைத்தியர் நோயாளியை சோதனையிடும் ரெலஸகோப்,

வீடுகளை உடைக்க பயன்படுத்தும்; ஆயுதங்கள்,கையுறைகள். சப்பாத்து, பல இலத்திரணியல் பொருட்கள் பெண் ஒருவரின் ஆபாச படம் போன்றவைகளை மீட்னர்.

குறித்த நபர் தான் ஒரு வைத்தியர் என பித்தலாட்டம் செய்து ஒரு பெண்ணை திருமணம் முடித்துள்ளதுடன் பல பெண்களை இவ்வாறு ஏமாற்றி தனது பாலியல் ஆசைகளை நிறைவேற்றியதுடன் வைத்திய மாணவன்,

மற்றும் வைத்தியர் எனவும் புலனாய்வு பிரிவு எனவும் தன்னை அறிமுகப்படுத்தி பொலிஸ் அதிகாரிகளுடன் நட்பை ஏற்படுத்தி அவர்களுக்கு சில பொருட்களை வழங்கி,

அவர்களுக்கு சந்தேகம் ஏற்படாவாதவாறு நடந்துகொண்டு அவரின் வீட்டில் சில பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு விபச்சாரத்துக்கு அறைகளை வழங்கி வந்ததுள்ளதுடன்,

பிரதேசத்தில் பல வீடுகளில் இரவு 2 மணியளவில் ஏறி அங்கு பாத்துரூமில் சிறிய கமராவை வைத்துவிட்டு பின்னர் அடுத்த தினம் சென்று அதில் பதிவாகியிருக்கும் பெண்கள் குளிக்கும் வீடியோவை வைத்து,

வீடியோவை வெளியில் விடப்போவதாக அச்சுறுத்தி பெருமளவில் பணம் பெற்றுவந்துள்ளதுடன் இவர் நான் அவனில்லை படம் போல இவ்வாறு கோடிக்கணக்கில் பணம் பெற்று வந்துள்ளார்.

இதில் பாதிக்கப்பட்வர்கள் பொலிஸ் நிலையம் சென்று முறையிட்டால் அதற்கான ஆதாரம் ஏதும் இல்லாதது மற்றும் பொலிசாரின் நட்பின் காரணமாக தப்பித்துவந்துள்ளார்.

இவருக்கு எந்தவிமான தொழிலும் இல்லை ஆனால் செத்துமதிப்பு ஏராளம் அவரின் பெயரில் அவன் ஓடும் மோட்டர்சைக்கிள் கூட இல்லை அதேவேளை கனிணி தொழில்நுட்பம் நன்கு கற்றுள்ளதுடன் ரோன் கமரா மூலம் கொள்ளையிட்டு,

கமரா பர்ரூமில் வைக்க செல்லும் போது ஒரு செப்வெயாரை பாவித்து அந்த நேரத்தில் சி.சி.ரி கமராக்களை இயங்காது செய்துவிட்டு தனது வேலைகளை முடித்துவந்துள்ளதாகவும்,

வைத்தியர் அடையாள அட்டை மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களின் அடையாள அட்டைகளை தயாரித்து தான் அங்கு வேலை செய்வதாக ஏமாற்றி வந்துள்ளதாக பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த நபருடன் அவரின் வீட்டிற்கு அருகாமையிலுள்ள நேஸ் உத்தியோகத்தர் பொலிஸ் பரிசோதகர் உட்பட பல பேர் பெண்களுடன் அவனின் வீட்டு வாடைகைக்கு விடப்படும் அறைக்கு,

சென்று வந்துள்ளதாக தெரியவந்துள்ளதையடுத்து பொலிசார் புலனாய்வு பிரிவினர் தீவிர விசாரணையிலல் ஈடுபட்டுவருவதாக பொலிசார் தெரிவித்தனர்.