புதினங்களின் சங்கமம்

சற்று முன் யாழ்ப்பாணத்தில் தனிமைப்படுத்தலில் இருந்த மேலும் 8 பேருக்கு கொரோனா!!

யாழ்.போதனா வைத்தியசாலை கொரோனா ஆய்வு கூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டிருந்த எண்மருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

நாளாந்தம் வெளியிடும் அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் தெரிவித்துள்ள விபரம் வருமாறு,

* இன்று யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 308 பேருக்கு Covid-19 பரிசோதனை செய்யப்பட்டது.

* இன்றைய பரிசோதனையில வடக்கு மாகாணத்தில் புதிதாக Covid-19 தொற்று ஒவருக்கும் இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. .

……….

* இருப்பினும் இன்றைய பரிசோதனையில் ஏற்கனவே தனிமைப்படுத்தல் இருக்கின்ற 8 பேருக்கு தொடர்ந்தும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

# முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் நிலையத்தைச் சேர்ந்த ஒருவர் யாழ் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெறுபவர்.

# மன்னர் தனிமைப்படுத்தல் நிலையத்தை சேர்ந்த ஒருவர்.

# விடத்தல்பளை தனிமைப்படுத்த நிலையத்தைச் சேர்ந்த 2 பேர்

# ஏற்கனவே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட தென்பகுதியை சேர்ந்தவர்கள் தற்போது மருதங்கேணி வைத்தியசாலையில் சிகிச்சை பெறுகின்றனர். அவர்களில் 11 பேருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் 4 பேருக்கு இன்னும் தொற்று இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.