புதினங்களின் சங்கமம்

மட்டக்களப்புக்கு வந்த விவேக்!! இலங்கைத் தமிழன் இருக்கும்வரை தமிழை அழிக்க முடியாது!!

உலகில் கடைசி இலங்கை தமிழன் இருக்கும் வரையிலும் தமிழை யாராலும் அழிக்க முடியாது என தமிழ் திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.

சுவாமி விவேகானந்தரின் சிகாகோ உரையின் 125 ஆவது ஆண்டு நிறைவு தினத்தினை குறிக்கும் வகையில் மட்டக்களப்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த நிகழ்வு மட்டக்களப்பு இராமக்கிருஸ்ண மிசன் ஏற்பாட்டில் சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றுள்ளது.

இதன்போது விவேகானந்தரின் நூல் தொகுதியொன்றும் நடிகருக்கு சுவாமிகளால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.