Home புதினங்களின் சங்கமம் இலங்கையில் 20 ஆவது கொரோனா மரணம் பதிவு!!

இலங்கையில் 20 ஆவது கொரோனா மரணம் பதிவு!!

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்த மற்றுமொருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

54 வயதுடைய கொழும்பு 12 பகுதியை சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் இலங்கையில் கொரோனா தொற்றாரினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.