புதினங்களின் சங்கமம்

துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி அலைகளும் தாக்கியது!

துருக்கியில் சற்று முன்னதாக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில் சுனாமி அலைகளும் தாக்கியுள்ளது.

சற்றுமுன் துருக்கியின் மேல்மாகாணத்தின் இஸ்மிர் பகுதிதில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவாகியுள்ள நிலநடுக்கத்தினால் பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகியுள்ளது.

நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட இடத்தில் மீட்பு பணிகள் தொடர்ந்து கொணடிருக்கையில் நிலநடுக்கம் காரணமாக சுனாமி பேரலைகளும் தாக்கியுள்ளது.

சுனாமி பேலைகள் குறித்த பகுதியின் நகருக்குள் புகுந்துள்ளதால் பல அடி உயரத்திற்கு கடல் நீரால் நிறைந்துள்ளதையடுத்து பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் மூலம் அறிய முடிகிறது.