யாழ் வடமராட்சி ஒரு கிராமம் முடக்கப்பட்டது!!
யாழ்ப்பாணம் வடமராட்ச்சி நெல்லியடி பிரதேசத்திற்கு உட்பட்ட ராஜ கிராமத்தில் உள்ள 60 குடும்பங்கள் சமூக முடக்கலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகியிருந்த நிலையில் நேற்று அடையாளம் காணப்பட்ட மூவரில் ஒருவர் ராஜ கிராமத்தினைச் சேர்ந்தவர் என்பதால் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த முடக்கல் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

