கூலர் வாகனத்தில் மீன் கொண்டு சென்றவர்களால் யாழ்ப்பாணத்துக்
பேலியகொட கொத்தணி மூலம் யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு மாகாணத்தில் கொரோனா பரவல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.
யாழ் பல்கலைக்கழக மாணவனுக்கு வீட்டுக்கார அன்ரி செய்த அலங்கோலம்
யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு மாகாணத்தின் பல இடங்களில் இருந்து கூலர் வாகனம் மூலம் பேலியகொட மீன் சந்தைக்கு மீன்கள் எடுத்துச் செல்வது அன்றாட நடவடிக்கையாக இடம்பெற்று வரும் நிலையில் புதிய கொரோனா வலயமாக உருவாகியுள்ள பேலியகொட கொத்தணி மூலம் வடக்கு மாகாணத்தில் கொரோனா பரவல் அபாயம் ஏற்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு மாகாணத்தில் இருந்து கடந்த இரண்டு வாரங்ககளாக பேலியகொட மீன் சந்தைக்கு சென்று திரும்பிய அனைவரும் குறிப்பாக கூலர் வாகனத்தில் சென்று திரும்பியவர்கள் உடனடியாக தங்களுக்கு அருகாமையில் உள்ள பொதுச் சுகாதார பரிசோதகர் பணிமனையை நாடி விபரங்களை தெரியப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
பேலியகொட மீன் சந்தைக்கு கடந்த இரு வாரங்களாக சென்று திரும்பியவர்களுக்கான அவசர அறிவிப்பு!
அவ்வாறு தம்மைத்தாமே இனம்காணும் நபர்கள் தம்மை தனிமைப்படுத்தி பாதுகாப்பான முறையில் பொதுச் சுகாதார பரிசோதகர்களை அணுகுவது அவசியமாகும்.
இவ்வாறு தம்மை வெளிப்படுத்தும் நபர்களை அவர்களது வீடுகளிலேயே சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணத்தில் வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, கற்கோவளம், மருதங்கேணி, கரவெட்டி மற்றும் கொழும்புத்துறை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து கூலர் வாகனங்களில் மீனகளை ஏற்றிச் சென்று வியாபார நடவடிக் இடம்பெற்று வருகிறது.
குறித்த இடங்களில் உள்ளிவர்களுக்கு இது குறித்த பொது அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ள போதிலும் வடமராட்சி கரவெட்டி பகுதியில் உள்ள கூலர் வாகத்ததுடன் தொடர்புடையவர்கள் தம்மை அடையாளப்படுத்தியதை அடுத்து அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
சமூக நோக்கம் கருதி இவ்வாறான ஏனையவர்கள் தாமாக முன்வந்து தகவல்களை உடனடியாக வெளிப்படுத்துமாறு கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

