புதினங்களின் சங்கமம்

27ம் திகதிவரை சிறைக்குள் அடைக்கப்பட்டார் ரிசாட்பதியுதீன்!!

குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் இன்று காலை தெஹிவளையில் வைத்து கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனை கைது செய்ய முன்னர் 24 மணித்தியாலங்கள் அவரை கண்காணிக்குமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு சட்டமா அதிபர் அறிவித்தல் விடுத்துள்ளார்.

சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி நிஷாரா ஜயரத்ன இதனை தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தில் ஆயர்படுத்தப்பட்ட ரிசாத் 27ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.