புதினங்களின் சங்கமம்

முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலியா சேனரத்ன காங்கேசன்துறைக்கு இடமாற்றம்!

பொலிஸ் ஊடகப் பேச்சாளராக இருந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலியா சேனரத்ன காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபரின் தனிப்பட்ட உதவியாளராக அவா் நியமிக்கப்பட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீனை கைது செய்து விடுவித்தமை தொடர்பாக ஜாலியா சேனரத்ன சமீபத்தில் வெளியிட்ட முரண்பாடான அறிக்கைகள் குறித்து அவா்மீது கடும் விமா்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

ஒழுங்கு நடவடிக்கையின் அடிப்படையில் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.