புதினங்களின் சங்கமம்

தற்கொலை குண்டுதாரிகளான பிரபல வர்த்தகரின் மகன்கள், மகள் சிக்கியது எப்படி?? அதிர்ச்சித் தகவல்கள் இதோ!!

தெமட்டகொடவில் தொடர்மாடி குடியிருப்பில் தற்கொலை குண்டை வெடிக்க வைத்து உயிரிழந்த
பெண்ணின் கவனனே, ஷங்கரில்லா ஹோட்டலில் தற்கொலை தாக்குதலை நடத்தியவர்களில் ஒருவர் என்ற
தகவல் வெளியாகியுள்ளது.

ஈஸ்டர் பண்டிகை தினத்தில் கடந்த 21ம் திகதி நாட்டின் பல பாகங்களிலும் நடத்தப்பட்ட தற்கொலை
குண்டு தாக்குதல்களில் 290 பேர் வரை உயிரிழந்தனர். இதில் நட்சத்திர ஹோட்டல்களில்
நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதல்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஷங்கரில்லா ஹோட்டலில் நடத்தப்பட்ட தாக்குதலிலேயே அதிக உயரிழப்புக்கள் ஏற்பட்டன. அங்கு
இரண்டு தற்கொலைதாரிகள் குண்டை வெடிக்க வைத்தனர்.

பாணந்துறை வீடு

முதலில் உணவகத்திற்குள் ஒரு தற்கொலைதாரி குண்டை வெடிக்க வைத்தார். குண்டுவெடிப்பால்
அல்லோலகல்லோலப்பட்டவர்கள் சிதறி ஓடி, அங்கிருந்து வெளியேற லிப்டை நோக்கி ஓடிவர, லிப்ட்
அருகில் அடுத்த தற்கொலைதாரி குண்டை வெடிக்க வைத்தார்.மொமட் சஹ்ரான் (தேசிய தவ்ஹீத் ஜமாத்
அமைப்பின் தலைவர்), இன்சான் சீலவன் ஆகியோரே தற்கொலை தாக்குதலை நடத்தினர்.

இதில் இன்சான் சீலவன் அவிசாவளையை சேர்ந்தவர். அவிசாவளை- வெல்லம்பிட்டி வீதியில் வர்த்தக
நிலையமொன்றை நடத்தி வருகிறார். தாக்குதலையடுத்து, அவரது வர்த்தக நிலையத்தில்
பணிபுரிந்த 9 பேரும் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

பாணந்துறை ஷெரீப் வீதியில் அடையாளம் காணப்பட்ட வீட்டில் இருந்து இவர்கள் தற்கொலை
தாக்குதலிற்காக வந்தார்களா என்பதை பொலிசார் ஆராய்ந்து வருகிறார்கள். தாக்குதலின் பின்
நடத்தப்பட்ட புலன் விசாரணையில் பாணந்துறை வீடு குறித்த தகவல் கிடைத்தது. அன்று இரவே
வீட்டை சுற்றிவளைத்த பொலிசார் வெடிகுண்டுகள், வெடிகுண்டு தயாரிப்பு உபகரணங்கள், சிம்
கார்ட் என்பவற்றை கைப்பற்றினர்.

தாக்குதலில் பின்னர் பொலிசார் விசாரணைகளில் ஈடுபட்டபோது, ஹோட்டலில் அவர்கள் தங்கியிருந்த
661ஆம் இலக்க அறையில் கொத்துரொட்டி பார்சல், ஜிகாத்

கிங்ஸ்பெரி, சினமென்கார்டன் ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதல்களில்
ஈடுபட்டவர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இமாஸ் அஹமட்

வர்த்தகர் இப்ராஹிம் ஹாஜியார்

இப்ராஹிம் (33), இல்ஹாம் அஹமட் இப்ராஹிம் (31) ஆகிய சகோதரர்களே தற்கொலை தாக்குதலில்
ஈடுபட்டனர்.

தாக்குதலை தொடர்ந்து சிசிரிவி காணொலிகளை பரிசோதித்த பொலிசார், தெமட்டகொடவில் அவர்கள்
தங்கிருந்தார்கள் என சந்தேகிக்கப்பட்ட வீட்டை முற்றுகையிட்டனர். பொலிஸார் வீட்டுக்குள் நுழைய,
மேல் தளத்தில் திடீரென பெரும் சத்தத்துடன் குண்டொன்று வெடித்தது. அது ஒரு தற்கொலை
தாக்குதல் என்பது தெரிந்தது. இதையடுத்து விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டு அங்கு
துப்பாக்கிச்சூடும் இடம்பெற்றது.

தொடர்மாடிக்குள் நுழையும் அதிரடிப்படை

ஹெலிகொப்டர் மற்றும் ட்ரோன் மூலம் வானிலிருந்தும் கண்காணிக்கப்பட்டது. தொடர்மாடி
குடியிருப்பில் அந்த வீடு அமைந்திருந்தது. மாடிப்படிகளால் சென்றால் மீண்டும் தாக்குதல்
நடத்தப்படலாமென்ற முன்னெச்சரிக்கையுடன், அதிரடி நடவடிக்கையாக ஏணி வைத்து
அதிரடிப்படையினர் தொடர்மாடிக்குள் பிரவேசித்தனர்.

அங்கு நடத்தப்பட்ட சோதனையில் ஒரு பெண்ணும், இரண்டு பிள்ளைகளும் சடலமாக மீட்கப்பட்டனர்.
தற்கொலைதாரியொருவரின் மனைவி பாத்திமா ஜிப்ரியும், பிள்ளைகளுமே அவர்கள் என பொலிசார்
நம்புகிறார்கள்.

அந்த வீட்டின் உரிமையாளரே பிரபல வர்த்தகர் அல்ஹாஜ் யூசுப் முஹமது இம்ராஹிம் ஹாஜியார்
(65). அவரது பிள்ளைகள் இருவருமே தற்கொலை தாக்குதல் நடத்திய இமாஸ் அஹமட் இப்ராஹிம் ,
இல்ஹாம் அஹமட் இப்ராஹிம் ஆகிய சகோதரர்கள் ஆவர். இம்ராஹிம் ஹாஜியார், அவரது இன்னொரு மகன்
இஜாஸ் அஹமட் இப்ராஹிம் (30) ஆகியோர் கைதாகினர். இஸ்மாயில் அஹமட் இப்ராஹிம் என்ற அவரது
இளைய மகன் காணாமல் போயுள்ளார்.

இதேவேளை, நேற்று வாகனத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிகுண்டு, செயலிழக்க செய்யப்பட்டபோது
வெடித்தது. அது தூரத்தில் இருந்து ரிமோட் மூலம் வெடிக்க செய்யும் குண்டாக இருக்கலாமென
கருதப்படுகிறது.