புதினங்களின் சங்கமம்

வகுப்பில் அடிபட்டு பேஸ்புக்கில் பதிவிட்ட யாழ் இந்து மாணவர்கள் பாடசாலையை விட்டு நீக்கப்பட்டனர்.

 

வகுப்பில் குழுவாக மோதி சண்டை பிடித்ததுடன் அந்தச் சண்டையை கைத்
தொலைபேசியில் பதிவு செய்து பேஸ்புக்கில் ஆக்ரோசமான சினிமா பாட்டுடன் வெளியிட்ட ஓ.எல் வகுப்பு மாணவர்கள் 5 பேர் பாடசாலையை விட்டு அதிபரால் நீக்கப்பட்டுள்ளதாக பாடசாலை வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது. யாழ் இந்துக்கல்லுாரிக்கு புதிதாக கடமையேற்றுள்ள ஆளுமையான அதிபர் பாடசாலையின் வளர்ச்சிக்காக பல இறுக்கமான நடவடிக்கைகளை எடுத்துவருவது குறிப்பிடத்தக்கது. அதிபருக்கு துணையாக பெற்றோர் மற்றும் பழைய மாணவர்களும் உறுதுணையாக இருக்க வேண்டும் என பாடசாலையின் முன்னேற்றத்தில் அக்கறை உள்ளவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

வீடியோ இணைப்பு