புதினங்களின் சங்கமம்

மரணமடைந்ததாக சந்தேகிக்கப்படும் முஸ்லீம் வர்தகர் இழுத்துச் செல்லப்படும் காட்சி(video)

நேற்று தெமடகொடவில் கைது செய்யப்பட்ட இப்ராஹிம் ஹாஜி மரணமடைந்ததாக சமூக வலைகளில் செய்திகள் பரவியுள்ளன.

இப்ராஹிம் ஹாஜியோடு நேற்று நள்ளிரவில் தான் கதைத்ததாக அவரது மருமகன் தன்னிடம்
கூறியதாக முஸ்லிம் கவுன்சில் தலைவர் என் எம் அமீன் குறிப்பிட்டார்.

இதன் உண்மைத்தன்மையை அறிய பொலிஸ் ஊடக பிரிவை முஸ்லீம் இணையத்தளம் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர்கள் அதனை உறுதிப்படுத்தவில்லை.

தற்போது சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்கள் சி ஐ டி யினரால் விசாரணைக்கு
உற்படுத்தப்பட்டு வரும் நிலையில் அது தொடர்பில் ஊடக பிரிவிற்கு சி ஐ டி தகவல்
வழங்கியதும் அறிவிப்பதாக குறிப்பிட்டனர்.

குறித்த விடயம் தொடர்பில் 3 தடவைகள் குறித்த முஸ்லீம் இணையத்தளம் பொலிஸ் ஊடக பிரிவை தொடர்பு கொண்டது  குறிப்பிடத்தக்கது.

நேற்று கைது செய்யப்பட்ட இப்ராஹிம் ஹாஜி மரணமடைந்ததாக கூறப்படுவதை பொலிஸ் ஊடக பிரிவு உறுதிப்படுத்தவில்லை.. நேற்று கைது செய்யப்பட்ட இப்ராஹிம் ஹாஜி மரணமடைந்ததாக
கூறப்படுவதை பொலிஸ் ஊடக பிரிவு உறுதிப்படுத்தவில்லை..

இதே வேளை அவர் கைது செய்யபபட்டு கொண்டு செல்லப்படும் காட்சிகள் இங்கு தரப்பட்டுள்ளன.