நல்லுார் தீர்த்தக் கேணிக்கு அருகில் சங்கிலி அறுத்த தம்பதிகள் கையும் களவுமாக பிடிபட்டனர்!!
நல்லூர் ஆலயத்தின் தீர்த்தோற்சவத்தில் வயோதிபப் பெண்ணிடம் சங்கிலி அறுத்து தப்பிக்க முயற்சித்த தம்பதி கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தத் திருவிழாவில் இன்று காலைத் தீர்த்தோற்சவம் இடம்பெற்றது.
இதன்போது உள்வீதியில் அடியவர்களின் வசதி கருதி தீர்த்த நீர் பாய்ச்சப்பட்டது. அதன்போது வயோதிபப் பெண் ஒருவர் தீர்த்தமாடும் போது, அவரது தங்கச் சங்கிலியை அறுத்து தப்பிக்க முயற்சிந்த தம்பதி அங்கு கடமையிலிருந்த கண்காணிப்பு பொலிஸாரிடம் சிக்கினர்.

