புதினங்களின் சங்கமம்

சைக்கிள் கட்சியின் தேசியப்பட்டியல் முடிவு இதுதான்!!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் தேசியப் பட்டியல் உறுப்பினரை தெரிவு செய்வதில் நிலவிவந்த கடுமையான இழுபறி முடிவுக்கு கொண்டுவரப்பட்டு அதன் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் பெற்ற வாக்குகள் அடிப்படையில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தேசியப் பட்டியல் ஆசனம் கிடைத்திருந்தது.

ஏற்கனவே யாழ் தேர்தல் மாவட்டத்தில் பெற்ற வாக்குகள் அடிப்படையில் ஒரு பாராளுமன்ற ஆசனத்தை பெற்றிருந்தது தமிழ் காங்கிரஸ். அதன் அடிப்பயைடில் கட்சி சார்பில் 31 ஆயிரத்து 658 வாக்குகளை விருப்பு வாக்குகளாக பெற்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகியிருந்தார்.

இந்நிலையில் 24 ஆயிரத்து 794 விருப்பு வாக்குகளை பெற்ற செல்வராசா-கஜேந்திரன், 24 ஆயிரத்து 743 விருப்பு வாக்குகளை பெற்ற விஸ்வலிங்கம்-மணிவண்ணன் மற்றும் 21 ஆயிரத்து 457 விருப்பு வாக்குகளை பெற்ற கனகரட்ணம்-சுகாஷ் ஆகியோர் வெற்றி வாய்ப்பினை இழந்தனர்.

இதற்கிடையே தமிழ் காங்கிரசுக்கு கிடைத்த தேசியப்பட்டியல் உறுப்பினர் வாய்ப்பை கிழக்கு மாகாணத்திற்கும் வன்னி பிராந்தியத்திற்கும் வழங்க வேண்டும் என அப்பகுதிகளைச் சேர்ந்த கட்சி ஆதரவாளர்களால் கோரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தது.

தேசியப்பட்டியல் வாய்பபை வன்னி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு அதிக விருப்பு வாக்குகளi (7200) கால்நடை வைத்தியர் திலகநாதனுக்கு வழங்க வேண்டும் என செட்டிகுளம் கால்நடை ஒன்றியத் தலைவர் பகிரங்கமாக ஊடக சந்திப்பில் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இது தொடர்பான கோரிக்கையினை முன்வைப்பதற்காக கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார்-பொன்னம்பலத்திற்கு பலதடவை அழைப்படுத்த போதிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

இவ்வாறான பின்னணியில் பெரும் இழுபறிகள் நடைபெற்று வந்த நிலையில் கட்சி சார்பில் தேசியப்பட்டியல் உறுப்பினராக செயலாளர் செர்வராசா-கஜேந்திரன் தெரிவு செய்யப்படுவதாக தீர்மானிகப்பட்டுள்ளதாக தமிழ் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் தமிழ் காங்கிரஸ் தரப்பில் மேலும் தெரிவிக்கப்படுகையில்,

அகில இலக்கை தமிழ் காங்கிரஸ் கட்சிக்கு (த.தே.ம.முன்னணி) கிடைத்துள்ள ஒரு தேசியப் பட்டியல் ஊடாக கட்சியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரனை பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கத் தீா்மானிக்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு இடம்பெற்ற பொதுத் குழு கூட்டத்தில் அனைத்து மாவட்டப் பிரதிநிதிகள், அமைப்பாளர்கள், மத்தியகுழு உறுப்பினர்களால் இந்தத் தீா்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அறிவித்துள்ளது.

வன்னி, மட்டக்களப்பு, திருமலை, அம்பாறை மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப் படுத்தி தனது பணிகளை செல்வராசா கஜேந்திரன் மேற்கொள்ள வேண்டும் என்று கட்சியின் பொதுக்குழு பரிந்துரை செய்ததுள்ளதாகவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அறிவித்துள்ளது.