புதினங்களின் சங்கமம்

கருனாவைக் கைகழுவியது மொட்டு!! சுரேன்ராகவன் உள்ளே!!

சிறிலங்கா பொதுஜன முன்னணி சார்பில் தேசியப்பட்டியல் ஊடாக பாராளுமன்றத்திற்கு செல்வோர் பட்டியலில் இருந்து கருணா வெளியேற்றப்பட்டு சுரேன் ராகவன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நடைபெற்று முடிந்த இலங்கையின் 9வது பாராளுமன்ற தேர்தலில் பொதுஜன முன்னணி பெற்ற வாக்குகளின் அடிப்படையில் 17 தேசியப்பட்டியல் ஆசனங்கள் கிடைத்திருந்தது.

இதனூடாக பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட உள்ளவர்களது பெயர் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

இப் பெயர் பட்டியலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு இடம் வழங்கப்படாததுடன் முன்னாள் வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இராஜபக்சேக்களின் செல்லப்பிள்ளையாக வலம் வந்த கருணா அம்பாறை மாவட்டத்திற்கான தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை இல்லாது செய்ய வேண்டும் என்ற நோக்கில் தனித்து களமிறக்கப்பட்டிருந்ததாக கருதப்பட்டிருந்தது.

தமிழ் பிரதிநிதித்துவத்தை இல்லாது செய்வதே பிரதான இலக்காகவும் அதனடிப்படையில் அவர் கருணா வென்றாலும் தோற்றாலும் பறவாயில்லை என்றும் தோற்றால் தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்ற உறுப்பினராக்கப்படுவார் என பரவலாக பேசப்பட்டு வந்தது.

இந்நிலையில்தான் பெரமுனவின் தேசியப்பட்டியல் உறுப்பினர் பட்டியலில் இருந்து கருணா வெளியேற்றப்பட்டு முன்னாள் வட மாகாண ஆளுநர் கலாநிதிசுரேன் ராகவன் முதன் முறையாக பாராளுமன்ற உறுப்பினராகும் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்வாங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் விபரம்

01- பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்

02- சாகர காரியவசம்

03- அஜித் நிவாட் கப்ரால்

04- ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி

05- ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த வீரசிங்க

06- மஞ்சுள திஸாநாயக்க

07- பேராசிரியர் ரஞ்சித் பண்டார

08- பேராசிரியர் சரித ஹேரத்

09- கெவிந்து குமாரதுங்க

10- மொஹமட் முசாமில்

11- பேராசிரியர் திஸ்ஸ விதாரன

12- பொறியியலாளர் யாமினி குணவர்தன

13- கலாநிதி சுரேன் ராகவன்

14- டிரான் அல்விஸ்

15- வைத்திய நிபுணர் சீதா ஹரம்பேபொல

16- ஜயந்த கெடுகொட

17- மொஹமட் பலீல் மர்ஜான்

ஆகியவர்கள் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் உறுப்பினர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.