புதினங்களின் சங்கமம்

பிரதேசசெயலக ஊழியருக்கு கொரோனா!!

பொலநறுவை மாவட்டம் லங்காபுர பிரதேச செயலகத்தில் பணியாற்றும் ஊழியா் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உறுதிப்படுத்தப்பட்டுள்ளார்.

இதனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜசிங்க இன்று உறுதிப்படுத்தியுள்ளார்.

கந்தகாடு மறுவாழ்வு மையத்தில் தொற்றுக்குள்ளான நோயாளி ஒருவருடன் இவர் நெருங்கிய தொடா்புகளைப் பேணியமை தெரியவந்துள்ளது.

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளி தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அனில் ஜசிங்க மேலும் கூறினார்.

புதிய தொற்று நோயாளியுடன் நேரடி தொடர்புகளைப் பேணியவா்களை கண்டறிந்து தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அனில் ஜசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, புதிய நோயாளியுடன் கந்தக்காடு மற்றும் சேனபுர புனா்வாழ்வு மையங்களுடன் தொடா்புடைய தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 599 ஆக அதிகரித்துள்ளது.