பொலிஸ் பரிசோதகர் ஒருவர் CCD யினரால் கைது!!
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் திகதி சாய்ந்தமருது குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பான தகவல்களை மறைத்தமை தொடர்பில் பிரதான பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பாறை பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் பரிசோதகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இன்று (13) காலை 8.30 மணியளவில் அம்பாறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்கரைபற்று பகுதியில் வைத்து குறித்த பொலிஸ் பரிசோதகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு குற்றவியல் பிரிவினரே குறித்த பொலிஸ் பரிசோதகரை கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபர் தடுப்ப காவலில் வைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர் குண்டு தாக்குதல் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் களவஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தின் போக்கவரத்து பிரதானியாக கடமையாற்றியதாக தெரிவிக்கப்படுகின்றது.

