புதினங்களின் சங்கமம்

யாழ் வரணியில் ஆயுதங்களுடன் நடமாடிய 7 பேர் இராணுவத்தால் கைது!!

யாழ்ப்பாணம் தென்மராட்சிப் பகுதியில் கூரிய ஆயுதங்களுடன் நள்ளிரவில் நடமாடிய 7 பேரை ராணுவத்தினர் பிடித்து கொடிகாமம் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, வரணி பகுதியில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ராணுவத்தினர் கடந்த நள்ளிரவு 5 மோட்டார் சைக்கிளில் பயணித்த 7 பேரை வழிமறித்து சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். வாள்கள், கோடரி, கொட்டன், தடிகள் என்பன அவர்களிடம் காணப்பட்ட நிலையில் அவர்களைப் பிடித்து கொடிகாமம் பொலிசாரிடம் ஒப்படைத்தனர். இன்று அவர்கள் 7 பேரும் சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்த படுவர் என்று கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.